மொட்டை ராஜேந்திரனுக்காக காத்திருந்த சூர்யா

Bookmark and Share

மொட்டை ராஜேந்திரனுக்காக காத்திருந்த சூர்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் சூட்டிங், மொட்டை (நான்கடவுள்) ராஜேந்திரனின் கால்ஷீட்டிற்காக நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் சூட்டிங் துவங்க உள்ளது.

படத்தின் ஹீரோக்கள், ஹீரோயினின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலம்போய், தற்போது காமெடி கேரக்டரில் நடிப்பவர்களின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் காலம் கனிந்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு, துவங்கி நடைபெற்று வந்தது. வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரனும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால், அவர் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருந்ததால், மாஸ் பட சூட்டிங்கில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. உடனே படக்குழு, சூட்டிங் முடிவடைந்தவரையிலான போஸ்ட் புரொடெக்சன் வேலைகளை மேற்கொண்டது.

படுபிசியாக இருந்த மொட்டை ராஜேந்திரன், தற்போது மாஸ் பட சூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். நாளை மகாபலிபுரம் பகுதியில், சூர்யா - மொட்டை ராஜேந்திரன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட உள்ளது.

இதனைத்தொடர்ந்து, நயன்தாரா உடனான பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பிலான 36 வயதினிலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, மாஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்
சிம்புவின் மறுபெயர் தாமதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions