மாஸ் - நயன்தாரா கடும் கோபம்

Bookmark and Share

மாஸ் - நயன்தாரா கடும் கோபம்

சூர்யா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'மாஸ்' படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வழக்கம் போலவே படத்தில் நடித்துள்ள இரண்டு ஹீரோயின்களான நயன்தாரா, பிரணீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. மேடையில் ஒரே ஆண்கள் மயமாகத்தான் இருந்தது.

நல்ல வேளையாக காஸ்டியூம் டிசைனரான வாசுகி வந்து ஓரளவிற்காவது அந்தக் குறையைப் போக்கினார். 'மாஸ்' படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதைப் பற்றி நேற்று வெளிப்படையாகப் பேசாமல் சுற்றி வளைத்துப் பேசினார். படம் வரும் வரை சில விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாமென இருக்கிறோம்.

அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். படத்தில் மொத்தம் 8 பேய்களாமே, அப்படியென்றால் நயன்தாராவும் ஒரு பேயா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு நிறையவே பதறிப் போனார் படத்தின் வெங்கட்பிரபு.

இதையெல்லாம் அவங்க கேட்டாங்கன்னா என்ன ஆகறது என்றார். உடனே மைக்கைப் பிடித்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, அவங்களே ஏற்கெனவே எங்க மேல கொலை வெறில இருக்காங்க.

படத்துல ஒரு காதல் காட்சி கூட இல்லன்னு அவங்க ரொம்ப கோபமா இருக்காங்க, இந்த சமயத்துல இப்படியெல்லாம் கேட்டு அவங்க கோபத்தை இன்னும் அதிகப்படுத்திடாதீங்க என்றார்.

நயன்தாரா இருக்கும் படத்தில் காதல் காட்சி இல்லையா....கடற்கரைக்குப் போயிட்டு காத்து வாங்காம வர முடியுமா... என்னம்மா இப்படிப் பண்ணீட்டீங்களேம்மா...!


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions