நிவின்பாலியின் படத்திற்கு 'மாஸ்' காட்டிய இளைஞர் கூட்டம்..!

Bookmark and Share

நிவின்பாலியின் படத்திற்கு 'மாஸ்' காட்டிய இளைஞர் கூட்டம்..!

வழக்கமாக கேரளாவில் நம்ம ஊர் பெரிய தலைகள் நடித்த படம் வெளியாகும்போது அந்த ஊர்ப்படங்களுக்கு லீவு விட்டுவிடுவதுதான் வாடிக்கை. விவரம் தெரியாத சின்ன பட்ஜெட் மலையாளப்படங்கள் மட்டும், யார் படம் வந்தால் எனக்கென்ன என்கிற ரீதியில் ரிலீஸாகும். அந்தவகையில் கடந்த வாரம் சூர்யா நடித்த 'மாஸ்' படம் கேரளாவிலும் வெளியானது.

சூர்யா படங்களுக்கும் கேரளாவில் நல்ல கிரேஸ் இருந்தாலும் கூட 'அஞ்சான்' தந்த அதிர்ச்சியால், இந்த முறை 'மாசு' வந்தால் நமக்கென்ன என பிருத்விராஜ் நடித்த 'இவிடே' மற்றும் நிவின்பாலி நடித்த 'பிரேமம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின.

சமீபகாலமாக நிவின்பாலியின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்து வருகிறது. அவரது படம் ரிலீஸாகும் நாட்களில் தியேட்டர்களில் இளசுகளின் கூட்டம் முட்டி மோதுகிறது.

அதனால் இந்தமுறை சூர்யாவின் 'மாசு'க்கு செல்லவேண்டிய பெரும்பாலான இளைஞர் கூட்டம் படத்தின் ரிசல்ட் வந்ததும் அதை போய் பார்த்துக்கொள்ளலாம் என, நிவின்பாலியின் 'பிரேமம்' படம் ஓடும் தியேட்டர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

இதில் தமிழ் ரசிகர்களும் அடக்கம். கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்கு முன் வெளியான நிவின்பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' படம் இளைஞர் கூட்டத்தை அப்படியே கட்டிப்போட்டு விட்டதுதான் இதற்கு காரணம். அதனால் இந்தமுறையும் கலெக்சனில் எகிறி அடிக்கிறாராம் நிவின்பாலி.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions