6 வருடங்களுக்குப் பிறகு மோதும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன்

Bookmark and Share

6 வருடங்களுக்குப் பிறகு மோதும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன்

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டன. உத்தமவில்லன் ரிலீஸ் தேதியில் நிலவும் குழப்பம் காரணமாக அதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம் மே 1 அன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. யுடிவி தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம் ஆகியோர் நடித்திருக்கும் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படமும் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தமவில்லன் படம் மே 1 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டதும் நிலைமை மாறியது. இப்போது மாஸ், புறம்போக்கு இரண்டு படங்களுமே ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டன.  

இரண்டுமே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்பதால் இரண்டில் ஒரு படம் மேலும் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கணிப்பையும் மீறி மாஸ், புறம்போக்கு இரண்டு படங்களும் மே 15 அன்று வெளியானால்... சரித்திரம் திரும்புவதாக அர்த்தம். அதாவது, 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சூர்யா நடித்த ஆதவன் திரைப்படம் வெளியானது.

ஆதவன் வெளியான தினத்துக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 16ஆம் தேதி எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படம் வெளியானது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் போட்டியிட்டது.

தற்போது சூர்யாவின் படமும், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படமும் ஒரே நேரத்தில் வெளியானால்...  6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன் படங்கள் நேரடியாக மோதுகிற நிலை உருவாகும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions