மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு

Bookmark and Share

மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மாஸான வரவேற்பை கொடுத்தார்கள். மேலும் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் இசை சேர்ப்பு பணிகளை தீவிரம் காண்பித்து வந்தார். தற்போது இந்த பணியும் முடியும் தருவாயில் உள்ளது.

இதனால் இப்படத்தின் பாடல்களை மே 8ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தின் டீசரை போல படத்தின் பாடல்களும் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions