'மாஸ்' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...

Bookmark and Share

'மாஸ்' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...

ஒரு படத்தின் இசை விழா என்றால் பிரம்மாண்டமான அரங்கிலோ, அல்லது தியேட்டர்களிலோ நடப்பதுதான் வழக்கம். இல்லையென்றால் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

சமீப காலமாக தனியார் எஃப்எம்களில் வெளியிடுவது ஃபேஷனாகி வருகிறது. இன்று வெளியாகும் 'மாஸ்' படத்தின் இசை வெளியீட்டில் அதிலும் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு தனியார் எஃப்எம்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுகிறார்கள். காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 1 மணி, 3 மணி, மாலை 5 மணி என இரண்டு மணி நேரத்திற்கொரு பாடலாக வெளியிடுகிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா இசையைமத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்க்கி எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் தமன் ஒரு பாடலுக்கு இசையமைத்தாகச் சொன்னார்கள். ஆனால், நேற்று வெளியிடப்பட்ட படத்தின் டிராக் லிஸ்ட்டில் தமனின் பாடல் இடம் பெறவில்லை.

ஒரு வேளை படத்தில் மட்டும் சேர்த்துள்ளார்களா அல்லது யுவனின் எதிர்ப்பால் அந்தப் பாடலை நீக்கி விட்டார்களா என்பது இன்று சிடி முழுமையாக வெளியிடப்படும்போதுதான் தெரிய வரும் யுவன் - வெங்கட் பிரபு கூட்டணி இந்தப் படத்தின் பாடல்களிலும் 'மாஸ்' ரசிகர்களை மட்டும் கவராமல் இசை ரசிகர்களையும் கவர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions