
வெங்கட் பிரபு, சூர்யா முதன் முறையாக இணைந்துள்ள படம் 'மாஸ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. தற்போது படத்தின் டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
படத்தின் இசை வெளியீடும் விரைவில் நடைபெற உள்ளது. 'மாஸ்' படத்தின் ஒரு சில பார்வைகளை வெங்கட் பிரபு முன்னரே வெளியிட்டிருந்தார். சூர்யாவை வித்தியாசமான தோற்றத்தில் காட்டிய அந்தப் படங்கள் பரபரப்பை எற்படுத்தின.
அதே டிசைனில் முன்னணி நடிகர்களை வைத்தும் ரசிகர்கள் டிசைன்களை வெளியிடும் அளவிற்கு பாப்புலர் ஆகியது. 'மாஸ்' படம் ஒரு பேய்க் கதை என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். படத்தில் சூர்யாவும் ஒரு பேயாகத்தான் நடித்துள்ளார்.
அவர் மட்டுமல்லாது படத்தில் மொத்தம் 8 பேய்களாம். அந்த 8 பேய்களுக்கும் நடுவில் தேவதையாக நயன்தாரா வலம் வருவாராம். ஒரு ஃபேன்டஸியான கதை என்பதால் நிச்சயம் இந்தப் படம் வித்தியாசமாக வர வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க சூர்யா சம்மதித்ததாகவும் சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவை சமீபத்தில் பேய்க் கதைகள்தான் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த 'மாஸ்' படம் மிகவும் காஸ்ட்லியான சுவாரசியமான பேய்ப்படமாக இருக்கும் என்கிறார்கள்.
Post your comment