குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்

Bookmark and Share

குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வெங்கட்பிரபு இயக்க, யுவன் இசை அமைக்க, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க செம மாஸாக உருவாகி இருக்கிறது.

தற்போது பேய் படங்களின் சீசன் என்பதால் இதுவும் ஒரு பேய் படம்தான். ஆனால் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பேய். சூர்யா, மாசிலாமணி, ஷக்தி என்ற இரண்டு கேரக்டரில் நடிக்கிறார்.

மாசிலாமணி ஜோடியாக ப்ரணிதாவும், ஷக்தி ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். ஒரு சூர்யா குறுக்கு வழியில் சம்பாதிக்க எதையோ செய்யப்போய் அவர் கொல்லப்பட அவரது ஆவி தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட ஷக்தியின் உடலுக்குள் புகுந்து பழிவாங்குகிற கதை. மாசிலாமணி என்கிற பெயரின் சுருக்கம்தான் மாஸ்.

சூர்யாவுக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். படம் அதிகம் பயமுறுத்தினால் குழந்தைகளை பெற்றோர்கள் தியேட்டருக்கு அழைத்து வரமாட்டார்கள். இதனால் முழு படத்தையும் போட்டுப் பார்த்த சூர்யா, வெங்கட்பிரபு உள்ளிட்டவர்கள் படத்தில் குழந்தைகளை பாதிக்கும் சில வன்முறை காட்சிகளை நீக்கி விட்டார்கள்.

படத்தில் சில காட்சிகள் திகிலாக தொடங்கும் ஆனால் கடைசியில் காமெடியாக முடியும் என்பதால் குழந்தைகள் தாராளமாக பார்க்கும் படி இருக்குமாம். அதோடு குழந்தைகளுக்கு பிடித்தமான காமெடிகளை சூர்யாவும், பிரேம்ஜியும் இணைந்து செய்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions