சூர்யா நடிக்கும் மாஸ் படம் மே 15 வெளியீடு!

Bookmark and Share

சூர்யா நடிக்கும் மாஸ் படம் மே 15 வெளியீடு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சூர்யா. ஃபேண்டஸி கதை என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் பேய்ப்படம் இது. தமிழ்த்திரை உலகில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் முன்னணி ஹீரோவான சூர்யாவும் ஆவியை நம்பி களத்தில் இறங்கி உள்ளார்.

கடைசியாக அவர் நடித்த அஞ்சான் மிகப்பெரிய தோல்விப்படமாகிவிட்டதால் மாஸ் படத்தையே நம்பி இருக்கிறார். மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங்கும் முடிவடைந்துவிட்டது.

எனவே விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சூர்யா. இன்னும் ஒரு சில நாட்களில் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகிவிடும் நிலையில் உள்ளது மாஸ் பட வேலைகள் சூடுபிடித்துள்ளன.

தற்போது கிடைத்த தகவலின்படி மாஸ் படத்தை மே 15 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். சூர்யாவுக்கு எப்படியும் வெற்றியைத் தேடிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் சுமார் 500 தியேட்டர்களில் மாஸ் படத்தை வெளியிட உள்ளனர்.

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions