மாஸ் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல்..!

Bookmark and Share

மாஸ் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்துள்ள மாஸ் படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மே 15 ஆம் தேதி மாஸ் படம் ரிலீஸ் என்று அப்படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அறிவித்தது.

இப்படியொரு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, மாஸ் படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர்ராஜா டாட் தரவில்லை என்றும் அதனால் மாஸ் படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றும்.... அதன் காரணமாக மாஸ் படம் மே 15 அன்று வெளிவர வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மாஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டில் இன்னொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸ் படத்துக்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர் என்றாலும், ஒரேயொரு பாடலுக்கு தமன் இசையமைத்துக் கொடுத்தார்.

அதுதான் தற்போது மாஸ் படத்துக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. தமன் இசையமைத்துக் கொடுத்த அந்தப் பாடல் தெலுங்குப்படம் ஒன்றின் ட்யூன். சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் அந்த ட்யூனை மாஸ் படத்திற்கு பயன்படுத்திவிட்டனர்.

பாடல் ரெடியான சில தினங்களிலேயே கோடிக்கணக்கில் செட் போட்டு பாடல்காட்சியையும் படமாக்கிவிட்டனர். இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் குறிப்பிட்ட அந்த ட்யூனை மாஸ் படத்தில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்விட்டாராம் சம்மந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்.

இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து படமாக்கப்பட்ட பாடல்காட்சியை மாஸ் படத்தில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தெலுங்குப்படத்தின் தயாரிப்பாளர் அந்தப்பாடலுக்கு அனுமதி கடிதம் கொடுத்தால்தான் மாஸ் ஆடியோவை வெளியிடுவோம் என்று ஆடியோ நிறுவனமும் கறாராக சொல்லிவிட்டதாம். மொத்தத்தில் மே மாதம் மாஸ் படம் வெளி வர வாய்ப்பே இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்.

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions