3 மில்லியனைத் தொட்ட 'மாஸ்' டீசர்!

Bookmark and Share

3 மில்லியனைத் தொட்ட 'மாஸ்' டீசர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படம் அடுத்த வாரம் 29ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இதுவரை இந்தப் படத்தின் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியிடப்பட்ட டீசர் அப்போதே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த ஒரு மாதத்தில் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யு டியூபில் இந்த டீசரைப் பார்த்து ரசித்துள்ளார்கள். அஜித், விஜய்க்குப் பிறகு 'மாஸ்' ஹீரோவாக சூர்யா இருக்கிறார் என்பது அவருக்கு சமூக வலைத் தளங்களில் இருந்து கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து அறிய முடிகிறது.

'மாஸ்' படம் ஒரு பேய்ப்படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், படத்தின் கதை இதுதான் என இதுவரை எந்த வடிவத்திலும் வெளியாகவில்லை.

படக்குழுவினர் படத்தின் கதையைப் பற்றி மிகவும் ரகசியம் காத்து வருகிறார்கள். 'ஆதவன்' படத்திற்குப் பிறகு சூர்யா, நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்நதுள்ள படம் என்பதால் அவர்களது காம்பினேஷனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருந்தாலும் படத்தின் சூர்யா, நயன்தாராவுக்கு இடையே எந்த ஒரு காதல் காட்சியும் இல்லை என்று வெங்கட் பிரபு சொல்லிவிட்டார். அப்படியென்றால் இந்தப் படம் கண்டிப்பாகக் காதல் படமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம். பேய்ப் பட வரிசையில் இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions