'மாஸ்' வியாபாரம் ஆரம்பம்!

Bookmark and Share

'மாஸ்' வியாபாரம் ஆரம்பம்!

''உத்தம வில்லன், மாஸ், வாலு, புறம்போக்கு” என கோடை விதவிதமான படங்கள் வந்து அசத்த உள்ளன. 'உத்தம வில்லன்' படத்தின் வியாபாரப் பேச்சுகள் அனைத்தும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.

இதற்கடுத்து வினியோகஸ்தர்களிடத்திலும், தியேட்டர்காரர்களிடத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக 'மாஸ்' படம்தான் அமைந்துள்ளதாம். சூர்யாவின் முந்தைய படமான 'அஞ்சான்' படத்தின் தோல்வி 'மாஸ்' படத்தின் வியாபாரத்தை சிறிதும் பாதிக்கவில்லை என்கிறார்கள்.

சூர்யாவுடன் ராசியான ஜோடியான நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளதாலும், வெங்கட் பிரபு எப்படியாவது இளைஞர்களைக் கவரும் விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருப்பார் என்றும் வியாபார வட்டாரங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

'அஞ்சான்' படம் தோல்வி என்றாலும் அந்தப் படத்தில் பாடல்கள் இனிமையாகவே அமைந்திருந்தன. இந்தப் படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவும் பாடல்களில் ஏமாற்றியிருக்க மாட்டார் என்றே கருதுகிறார்கள்.

இசையும், வித்தியாசமான படப்பிடிப்பும் இந்தப் படத்தை வேறு ஒரு கோணத்தில் காட்டும் என்று நம்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு படத்தின் வியாபாரத்திலும் எதிரொலிக்கிறது.

எம்ஜி அடிப்படையில் காஞ்சிபுரம் அருணா திரையரங்கில் இந்தப் படத்தை 42 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்திலேயே இவ்வளவு விலை என்றால் மற்ற நகரங்கள், மாநகரங்களில் எவ்வளவு விலை போகும் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் 'மாஸ்' படம் ஒரு மாஸ் அட்ராக்ஷனாக இருக்கும் என்கிறார்கள்

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions