மாஸ் டப்பிங்கில் பிசியான சூர்யா

Bookmark and Share

மாஸ் டப்பிங்கில் பிசியான சூர்யா

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பார்த்திபன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும், ‘மாஸ்’ படத்திற்கான டப்பிங் பணியில் சூர்யா கலந்து கொண்டுள்ளார். சூர்யாவும், வெங்கட் பிரபுவும் டப்பிங் தியேட்டருக்கு முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions