'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை' - 'மாஸ்' டீசர் அதிரடி

Bookmark and Share

'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை' - 'மாஸ்' டீசர் அதிரடி

'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வெளிவரும் 'மாஸ்' படம் பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு காரணம். ஆனானப்பட்ட அஜித்துக்கே 'மங்காத்தா' படத்தின் மூலம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அஜித்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் வெங்கட்பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி திரையுலகத்திலேயே பலரும் பொறமைப்பட்டார்கள். அப்படி என்ன எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், 'மங்காத்தா' படத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அற்புதமான மசாலா ஹிட்டாக வெங்கட்பிரபு கொடுத்தார். அதே போல, 'அஞ்சான்' படத்தின் மிகப் பெரும் தோல்விக்குப் பிறகு சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரே என மீண்டும் ஒரு கூட்டம் சந்தேகத்தை எழுப்பியது.

அஜித், வெங்கட் பிரபு மீது வைத்த அதே நம்பிக்கையை, சூர்யாவும் வைத்தார். அதன் ரிசல்ட் இன்று வெளியான 'மாஸ்' படத்தின் டீசரிலேயே தெரிந்துவிட்டது. யுவனின் பின்னணி இசையில், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், ஒரு பரபரப்பான டீசரைக் கொடுத்து பலரையும் வாயடைக்கச் செய்துவிட்டார் வெங்கட் பிரபு.

டீசரின் ஆரம்பத்திலேயே 'அஞ்சான்' படத் தோல்விக்காக தன்னைப் பற்றி ஏளனமாகப் பேசியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “எதிர்பார்க்கலை இல்லை, நான் திரும்ப வருவன்னு எதிர்பார்க்கலை இல்லை, அதுவும் இப்படி வருவன்னு எதிர்பார்க்கலை இல்லை, ” என அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக டீசரின் ஆரம்பத்தில் சூர்யாவின் குரலில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'மாஸ்', டீசர் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே ஒன்றரை லட்சம் ஹிட்ஸை அள்ளியுள்ளது. யு டியூபில் கமெண்ட் பக்கத்தையும் ஓபனிலேயே வைத்துள்ளதும் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என 'மாஸ்' டீம் துணிச்சலுடன் கூறுவது போல் உள்ளது.


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions