400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

Bookmark and Share

400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

சூர்யா, நயன்தாரா, ப்ரிணிதா, சமுத்திரகனி, பார்த்திபன். பிரேம்ஜி நடித்துள்ள மாஸ் படம் வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. பட வெளியீட்டு தேதி முன்பே அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இன்றுதான் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது. தமிழ் நாடு முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. சென்னையில் மட்டும் சுமார் 50 தியேட்டர்களில் ரிலீசாகிறது.

ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரித்துள்ள படத்தை ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் 500 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருந்தார்கள்.

கடந்த 15ந் தேதி வெளியான 36 வயதினிலேவும், புறம்போக்கும் வெளியான தியேட்டர்களில் 50 சதவித தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளிவந்த அருள்நிதி நடித்துள்ள டிமாண்டி காலனி படம் சிட்டி தியேட்டர்களில் ஸ்டெடியாக அமர்ந்திருக்கிறது.

எனவே நினைத்த தியேட்டர்கள் கிடைக்காததால் 400 தியேட்டர்களில் மாஸ் வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள காமெடி திகில் படம். சூர்யா முதன் முறையாக பேயாக நடித்துள்ளார்.

குழந்தைகளும் பார்க்கிற வகையில் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கி உள்ளது. யூ சான்றிதழுக்காகவே படத்தில் பல காட்சிகள் நீக்கப்பட்டது. பார்த்திபன் போலீஸ் அதிகாரியாகவும், சமுத்திரக்கனி 60 வயது வில்லனாகவும், பிரேம்ஜி வழக்கம்போல ஹீரோவின் காமெடி நண்பராகவும் நடித்துள்ளார்.

வரிவிலக்கிற்காக மாஸ் என்கிற மாசிலாமணி என்று டைட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மாஸ் என்பதையே பிரதானமாக காட்டி விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
மாஸ் டீசர்: ஒரு பார்வை
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions