மாஸ் டீசர்: ஒரு பார்வை

Bookmark and Share

மாஸ் டீசர்: ஒரு பார்வை

சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

டீசர் பற்றிய ஒரு பார்வை...

ஏற்கெனவே கசிந்த கதைதான் டீசரில் எதிரொலிக்கிறது. கொடூர வில்லன்களால் கொல்லப்படும் சூர்யா, ஆவியாகவோ, காட்டேரியாகவோ, சக்தி வாயந்த அமானுஷ்ய சக்தியாகவோ மீண்டும் வந்து எதிரிகளை பழிவாங்குகிற கதை. டீசரின் துவக்கத்தில் வரும் "எதிர்பார்க்கலல்ல... நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல.

அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல" என்கிற வசனமும், டீசரின் முடிவில் பிரேம்ஜி "இந்த வீட்டில் இரண்டு நாளா ஏதோ அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது" என்று குறிப்பிடுகிறார்.

அதைத் தொடர்ந்த சூர்யா சுவரில் நடக்கிற காட்சிகளும் காட்டேரி போன்று சிங்கப்பல் காட்டி சிரிகிற காட்சியும் இதனை உறுதிப்படுத்துகிறது. கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது என்பதையும் டீசர் உறுதிப்படுத்துகிறது.

பாடல் காட்சிகள் பிரமாண்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி வித்தியாசமான கெட்அப்பில் வில்லனாக வருகிறார். பார்த்திபன் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

எக்ஸ் கமிஷனர் வாக்கிங் போகும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட செய்தியை டி.வி.ரிப்போர்ட்டர் ரம்யா சொல்வதும், "இது அப்சலூட்லி மர்டர், ஸ்கெட்ஸ் போட்டு தூக்கி இருக்காங்க.

செஞ்சது ஒரு ஆளா, ஓரு கூட்டமான்னு தெரியல" என்று பார்த்திபன் பேசும் வசனம் மூலம் சூர்யா வேட்டையாடுவதும், சூர்யாவை வேட்டையாட பார்த்திபன் மும்முரமாக இருப்பதும் தெரிகிறது. மொத்தத்தில் மாஸ் ஆக்ஷன் ஹாரர் மூவி என்பதையே டீசர் குறிப்பிடுகிறது.

 


Post your comment





Related News
மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - \'மாசு\' ஆனது \'மாஸு\'
400 தியேட்டர்களில் மாஸ் ரிலீஸ்: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
3 மில்லியனைத் தொட்ட \'மாஸ்\' டீசர்!
மாஸ் படத்துக்கு தடை நீங்கியது எப்படி?
குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
மாஸ் - சூர்யாவுக்கு வெங்கட்பிரபு போட்ட நிபந்தனை
\'மாஸ்\' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...
மாஸ் படத்தின் இசை மே 8ம் தேதி வெளியீடு
\'இப்படி வருவன்னு எதிர்பார்க்கல இல்லை\' - \'மாஸ்\' டீசர் அதிரடி
\'மாஸ்\' வியாபாரம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions