மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - 'மாசு' ஆனது 'மாஸு'

Bookmark and Share

மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - 'மாசு' ஆனது 'மாஸு'

'மாசு என்கிற மாசிலாமணி' இதுதான் இன்றைய தலைப்பு என சொல்லுமளவிற்கு 'மாஸ்' படத்தின் தலைப்பை கடந்த ஒரு வாரத்திற்குள் மூன்றாவது முறையாக மாற்றியிருக்கிறார்கள். படத்தை ஆரம்பித்த நாளிலிருந்து தணிக்கைக்கு அனுப்பியவது வரை 'மாஸ்' என்ற தலைப்புதான் இருந்தது.

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததும் 'மாஸ் என்கிற மாசிலாமணி' என மாற்றினார்கள். அதன் பின் 'மாஸு என்கிற மாசிலாமணி என மாற்றினார்கள். நேற்று வரை 'மாஸு' என்ற எழுத்தைப் போட்டு விளம்பரப்படுத்தியவர்கள் இன்றிலிருந்து அதையும் 'மாசு' என்று மாற்றிவிட்டார்கள்.

ஆக, இப்போது 'மாசிலாமணி' என்பதன் சுருக்கமாக 'மாசு' என அழைக்கப்படும் விதத்தில் படத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 'மாசிலாமணி' என்பதை சுருக்கமாக 'மாசி' என்றுதானே அழைப்பார்கள்.

ஒரு வேளை, நாளை 'மாசி என்கிற மாசிலாமணி' என்று மாற்றுவார்களோ என்னமோ...?. ஏன் இவ்வளவு குழப்பம் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions