3டியில் வெளியாகவிருக்கும் மாஸ் படம்...!

Bookmark and Share

3டியில் வெளியாகவிருக்கும் மாஸ் படம்...!

லிங்குசாமி இயக்கிய 'அஞ்சான்' படத்தின் தோல்வியிலிருந்து மீண்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுவரை வெளியான பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி வருகிறது மாஸ் படம்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கும் பிரேம்ஜியும் மாஸ் படத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் மாஸ் படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கி உள்ளது.

மாஸ் படத்தை ஈராஸ் நிறுவனம் வாங்கிய பிறகு அப்படத்தின் ரேன்ஜ் மேலும் கூடிவிட்டது. யெஸ்.. மாஸ் படத்தை 3டியில் வெளியிட உள்ளது ஈராஸ். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது ஈராஸ்.

'வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் திரைப்படத்தின் உலகளவிலான வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது தமிழின் முதல் 3டியில் படம் பிடிக்கப்பட்ட படமாகும். ஜூன் அல்லது ஜூலை மாதம் இப்படம் ரிலீஸாகும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளது.


Post your comment





Related News
தெலுங்கிலும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்
சர்ச்சையில் சிக்கிய மாஸ் சூர்யா!
பாண்டிச்சேரியில் மாஸ் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெங்கட்பிரபு
மாஸ் படத்தில் சிங்கம் டச்
பொங்கலுக்கு மாஸ் டீசர் ரிலீஸ்?
பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!
‘மாஸ்’ படத்தில் ஆந்திரா மசாலாவை அதிகம் சேர்க்கும் வெங்கட் பிரபு
ரஹ்மான் இசையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத் தலைப்பு \'24\'!
ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கவில்லை:வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions