சர்ச்சையில் சிக்கிய மாஸ் சூர்யா!

Bookmark and Share

சர்ச்சையில் சிக்கிய மாஸ் சூர்யா!

அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழ் சினிமாவைச்சேர்ந்த யாரும் படப்பிடிப்பு நடத்த செல்வதில்லை. ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அசின் சென்றபோதுகூட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவரோ, நான் ஒன்றும் தமிழ் நடிகை இல்லை என்று சொல்லிவிட்டு சென்றார். விளைவு, இனிமேல் எந்த தமிழ்ப் படத்திலும் அசினை நடிக்க விடமாட்டோம் என்று ஒருசாரர் அப்போது குரல் கொடுத்தனர். அதன்காரணமாகவே அசினை புக் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.

இந்த நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி கடற்கரை பகுதிக்கு படப்பிடிப்புக்கு சென்ற சூர்யாவின் மாஸ் படக்குழு அங்கிருந்தபடியே இலங்கைக்கு சென்று அங்குள்ள கடற்கரையோரமாக படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியதாக தற்போது ஒரு சர்ச்சை செய்தி வெளியாகியிரூக்கிறது.

ஆனால், இதுகுறித்து மாஸ் பட டைரக்டர் வெங்கட்பிரபுவை நோக்கி பாய்ந்த கேள்விகளுக்கு, தூத்துக்குடியில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். இலங்கைக்கு செல்லவே இல்லை.

யாரோ திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் மாஸ் வெளியாகும்போது அதை வைத்தே போர்க்கொடி பிடிப்பார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தெலுங்கிலும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்
3டியில் வெளியாகவிருக்கும் மாஸ் படம்...!
பாண்டிச்சேரியில் மாஸ் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய வெங்கட்பிரபு
மாஸ் படத்தில் சிங்கம் டச்
பொங்கலுக்கு மாஸ் டீசர் ரிலீஸ்?
பல்கேரியாவில் ‘மாஸ்’ ஷூட்டிங்: சூர்யா, ப்ரணீதா ஆட்டம்!
‘மாஸ்’ படத்தில் ஆந்திரா மசாலாவை அதிகம் சேர்க்கும் வெங்கட் பிரபு
ரஹ்மான் இசையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத் தலைப்பு \'24\'!
ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கவில்லை:வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions