தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?

Bookmark and Share

தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?

தமிழ் நடிகர்களின் மவுசு தெலுங்குத் திரையுலகில் உயர்வதை தெலுங்கு மீடியாக்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் வெளியிடும் பல செய்திகளிலிருந்து தெரிகிறது. தொடர்ச்சியாக தமிழ் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு நேரடித் தெலுங்குப் படங்களுடன் போட்டி போடுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

மேலும், இதன் பின்னணியில் சில தெலுங்கு ஹீரோக்களே இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக “லிங்கா, ஐ, ஆம்பள, வேலையில்லா பட்டதாரி, உத்தம வில்லன், என்னை அறிந்தால், மாஸ்” உள்ளிட்ட சில பெரிய நடிகர்களின் படங்கள் நேரடித் தெலுங்குப் படங்கள் அளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டும், பிரமோஷன் செய்யப்பட்டும் வெளியாகின்றன. இதனால் சில சிறிய தெலுங்குப் படங்களுக்கு அங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது

. கடந்த வாரம் 'மாஸ்'  திரைப்படத்திற்காக சூர்யா ஐதராபாத்தில் தங்கியிருந்து பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டும் பங்கேற்றார் என்ற காரணத்தைக் கூறி மற்ற மீடியாக்கள் அவருடைய நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கின்றன. இதனால், சூர்யா மீடியாக்களிடம் மன்னிப்புக் கேட்டார் என்றும் சொன்னார்கள்.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் அங்கு நிறைய நடக்க வாய்ப்புள்ளதாக இங்குள்ள சீனியர் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்ப் படங்கள் சமீப காலமாக ஐதராபாத்தில் அதிகம் நடைபெற்று வருகிறது. ரஜினியின் 'லிங்கா' உட்பட, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரின் தற்போதைய படங்கள் கூட அங்கு அதிகமாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சமீபமாக கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் தெலுங்கில் நேரடியாக நடிக்கச் சென்றிருப்பதற்கும் மறைமுகமாக சிலர் சில விஷயங்களை செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.

இங்கு பல தெலுங்கு நடிகர்கள், நடிகைகளும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடிப்பதை மறந்து விட்டு தெலுங்கு மீடியாக்கள் தமிழ் நடிகர்கள் அங்கு செல்லும் போது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது ஒரு புதிய பிரச்சனையாக எழலாம் என்றும் இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பெயர் வெளியிட விரும்பாத சில தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
\'மாஸு என்கிற மாசிலாமணி\' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - வர்ஷன்
பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் இப்போதைக்கு இல்லை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions