ஹீரோவாக ஜெயிக்க போராடும் மகேந்திரன்

Bookmark and Share

ஹீரோவாக ஜெயிக்க போராடும் மகேந்திரன்

நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுனமானவர் மாஸ்டர் மகேந்திரன். தென்னிந்திய மொழிகளில் 110 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதுகள் பல பெற்றிருக்கிறார்.

20 ஆண்டுகள் சினிமாவிலேயே வாழ்ந்த மகேந்திரனுக்கு சினிமா தவிர வேறெதுவும் தெரியாது. 24 வயதாகும் மகேந்திரன் இனி குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க முடியாது. அதனால் ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

சில சிறிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் கடந்த ஆண்டு வெளிவந்த விழா படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ஆனாலும் படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது விந்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். மாநிறம், அச்சு அசலான தமிழ் முகம், சினிமா பற்றி தெளிந்த அறிவு, 20 ஆண்டு அனுபவம் அனைத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். மாஸ்டர் மகேந்திரன், ஹீரோ மகேந்திரனாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
விஜய் சார் சொன்ன ஆறுதலால் தான் என் தங்கை சாப்பிட்டார்- பிரபல கலைஞர் உருக்கம்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
இந்த பிரபல நடன மாஸ்டர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
பெண்கள் பிரச்சனையில் பல்கேரியா போலீஸிடம் சிக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் – அஜித் உதவியால் வெளியே வந்தார்?
அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions