மாதவனுக்குக் குவியும் பாராட்டுக்கள்...!

Bookmark and Share

மாதவனுக்குக் குவியும் பாராட்டுக்கள்...!

தமிழில் மாதவன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'வேட்டை'. கடந்த நான்கு வருடங்களாக தமிழில் எந்தப் படங்களிலும் அவர் நடிக்காமலே இருந்தார். அதே போல ஹிந்தியிலும் அதிகமான படங்களில் நடிக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஹிந்திப் படங்கள், ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த அளவிற்குப் படங்களைக் குறைத்து விட்டார். ஆனால், கடந்த வாரம் வெளிவந்த 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' படம் அவருக்கு மிகவும் நிறைவான ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டது.

விரைவில் இந்தப் படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டுவிடும் என பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 70 கோடி ரூபாய் வரையிலான வசூலையும், வெளிநாடுகளில் 25 கோடி ரூபாயிலான வசூலையும் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல படத்தின் நாயகன் மாதவன், நாயகி கங்கனா ரனவத் ஆகியோரை பாலிவுட்டின் பல முக்கிய பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். மாதவனுக்கு கோலிவுட்டிலிருந்தும் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமான இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இதற்கு முன் தனுஷை வைத்து இயக்கிய 'ராஞ்சனா' படமும் 100 கோடி கிளப்பில் இணைந்த படம். அடுத்தடுத்து சுவாரசியமான படங்களைக் கொடுத்து வரும் ஆனந்த் எல்.ராய் பாலிவுட்டின் ஸ்டார் டைரக்டர்களில் ஒருவராகிவிட்டார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions