பெருமாள் முருகன் நாவலை படமாக்கவில்லை: மாதொருபாகன் இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

பெருமாள் முருகன் நாவலை படமாக்கவில்லை: மாதொருபாகன் இயக்குனர் விளக்கம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவல் திருச்செங்கோடு பகுதி பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி பெரிய போராட்டங்கள் நடந்தது. இதையட்டி நாவல் உள்ளிட்ட தனது படைப்புகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் மாதொருபாகன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை பெண் இயக்குனர் ஆதிரா பாண்டிலட்சுமி இயக்குகிறார். இது பெருமாள் முருகனின் நாவலை தழுவி எடுக்கிற படம் என்ற தகவலும் பரவியது.

இதனை இயக்குனர் ஆதிரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மாதொருபாகன் டைட்டிலை இரண்டு வருடத்துக்கு முன்பே பதிவு செய்து கதையும் உருவாக்கி விட்டேன்.

சில காரணங்களால் அப்போது துவக்க முடியவில்லை. இப்போதுதான் அது சாத்தியமாகி இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் நாவலுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை.

இது என்னுடைய சொந்தக்கதை. மாதொருபாகன் என்பது பெண்களுக்கு சமபங்கு கொடுத்த சிவபெருமானின் பெயர் இந்த பெயரை வைப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து தயாராகிற படம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்தில் வலுவான ஹீரோ கேரக்டர் ஒன்று இருக்கிறது. இதற்காக பெரிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகிறேன். என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions