நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி

Bookmark and Share

நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி

விஜயகாந்த் புதல்வன் ஷண்முக பாண்டியன் ஜோடியாக மதுரவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளி மீனாட்சி. ஊடகங்கள் இவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியது. 

இந்த படத்தை தொடர்ந்து தமிழிலிருந்து  பலரும் அழைப்பு விடுத்தும் 'ப்ளஸ் ஒன்' பரீட்சை எழத வேண்டியிருந்ததால்    அந்த வாய்ப்புகளை பயன்படுத்த இயலவில்லை என்று  வருத்தம் இருந்தாலும் 'நான் ரொம்ப  சின்னபொண்ணுங்க,எனக்கு சினிமாவில் சாதிக்க இன்னும் நிறைய டைம் இருக்குதுங்க' என்று தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் மீனாட்சி . 

மேலும் சின்ன வருத்தமும் மீனாட்சிக்கு உள்ளதாம். 'மதுரவீரன்' படத்தில் தன் நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்த போதிலும் அதன் பிறகு அவரை தேடி வந்தது எல்லாமே மெட்சூரிட்டியான கிராமீய கதாநாயகி வேடங்கள் தானாம்.

அதனால் இளமையான மாடர்ன் வேடங்களிலும் நடித்து தனது திறமைய நிரூபிக்க உதவும் ஒரு வேடத்துக்காகவும் காத்திருக்கிறேன் என்கிறார் மீனாட்சி. தன் நடிப்பை இன்னும் மேம்படுத்த விடுமுறை வேளைகளில் நாட்டியம் கற்று வரும் மீனாட்சியின் ஆசை  நல்ல நடிகை என்று தமிழ் சினிமாவில் பெயரும் புகழும் பெற வேண்டும் என்பது தான் என்று அழுத்தமாக சுத்தமான தமிழில் சொல்கிறார். மீனாட்சியின் ஆசை நிறைவேற வாழ்த்துவோம்.


Post your comment





Related News
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions