மாற்றான் நஷ்டத்துக்கு ஈடாக மாஸ் படத்தை வாங்கியதா ஈராஸ்?

Bookmark and Share

மாற்றான் நஷ்டத்துக்கு ஈடாக மாஸ் படத்தை வாங்கியதா ஈராஸ்?

லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டதில் 35 கோடி நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லி விநியோகஸ்தர்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படத்தை வாங்கி விற்று லாபம் பார்த்த ஈராஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமோ கூலாக தன் வியாபாரத்தை கவனித்து வருகிறது.

உத்தமவில்லன், ரஜினி முருகன் ஆகிய படங்களை வாங்கிய ஈராஸ் அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தை வாங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ் படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா ஜோடியாக நடிக்கின்றனர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.  

இப்படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வியாபார விஷயங்களும் தற்போது சூடு பிடித்துள்ளது. அதன் படி 'மாஸ்' படத்தின் உலகாளவிய விநியோக உரிமையை 'ஈராஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த வியாபாரத்தை முன்னின்று நடத்தியவர் ரஜினியின் மகளும், ஈராஸ் சௌத் நிறுவனத்தின் அதிகாரியுமான சௌந்தர்யா ரஜினிகாந்த். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான 'மாற்றான்' படத்தையும் ஈராஸ் நிறுவனம்தான் வாங்கி உலகம் முழுக்க விநியோகம் செய்தது.

அந்தப் படத்தின் படு தோல்வி காரணமாக பல கோடிகளை இழந்தது ஈராஸ். இந்நிலையில், மீண்டும் சூர்யா நடித்த படத்தை ஈராஸ் வாங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மாற்றான் நஷ்டத்துக்கு ஈடாகவே மாஸ் படத்தை குறைந்தவிலைக்கு ஈராஸ் வாங்கி உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions