சசிகலா சிறையில் முதல் வகுப்பு பெறுவதற்காக முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரம்

Bookmark and Share

சசிகலா சிறையில் முதல் வகுப்பு பெறுவதற்காக முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரம்

 

சசிகலா சிறையில் முதல் வகுப்பு பெறுவதற்காக முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரம்

சசிகலாவிற்கு பெங்களூரு சிறை தயார்,  முதல் வகுப்பு பெறுவதற்காக முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரம்

சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட்ட பன்னீர்செல்வத்தை  ராஜினாமா செய்ய வைத்து, சசி.,முதல்வராக பொறுப்பு ஏற்க காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வருவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. தீர்ப்பு வருவதற்குள் சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை தயார் படுத்தி வைக்குமாறு, மத்திய அரசு மாநில அரசு மூலம் ரகசிய  உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் கசிந்துள்ளது. பன்னீர் மவுனமாக இருந்ததன் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது??

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது தோழி அதிகமுவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். இதனை தொடர்ந்து முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார். சசிகலா முதல்வராக பதவி ஏற்பதை அதிமுவின் நிர்வாகிகள் தவிர மற்ற யாரும் விரும்பவில்லை.

அவருக்கு இப்போதைய நிலையில் 99 சதவீதம் எதிர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவ்வளவு எதிர்ப்புக்கு இடையிலும் சசிகலா முதல்வராக பதவி ஏற்பதில் தீவிரமாக உள்ளார். அவர் முதல்வர் பதவி ஏற்க ஏன் அடம்பிடித்து வருகிறார் என்பதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. இதில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என கருதப்படுகிறது. எனவே முதல்வராக இருந்தால் தண்டனை கிடைத்தாலும் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும். இதற்காகவே சசிகலா முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளார்.

 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions