ஆங்கில புத்தகத்தை தழுவி உருவாகும் மாயா

Bookmark and Share

ஆங்கில புத்தகத்தை தழுவி உருவாகும் மாயா

நயன்தாரா நடித்து வரும் புதிய படம் மாயா. அவருடன் ஆரி, லட்சுமி ப்ரியா, சந்திரமவுலி, அம்ஜத்கான், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தமிழில் தேணாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. அஸ்வின் சந்திரசேகர் என்ற புதுமுகம் இயக்குகிறார். ரான் ஏதன் யோகன் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை புறகநரில் மாயாவானம் என்ற காட்டுப்பகுதி உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இந்த காட்டின் நடுவில் ஒரு மனநோய் மருத்துவமணை செயல்பட்டு வந்திருக்கிறது. முற்றிய நிலையில் உள்ள மன நோயாளிகளை இங்கு வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

பின்பு அந்த மனநோய் மருத்துவமனை கைவிடப்பட்டுவிட்டது. அங்கு நடந்த பல விநோத சம்பவங்களை பற்றி ஆராய்ச்சி செய்து கேத்ரின் என்ற எழுத்தாளர் மேஸ்டாஸ் அஸ்யுலம் என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் மாயா எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நயன்தாரா கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணாக, ஒரு குழந்தையின் தாயாக நடிக்கிறார். "மரணம் என்பது வாழ்க்கையின் முடிவில்லை" என்பதுதான் படத்தின் முத்திரை வாசகம். ஹாலிவுட் ஸ்டைலில் படு திரில் படமாக உருவாகி வருகிறது மாயா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions