இரண்டாவது மகனையும் களமிறக்கினார் மயில்சாமி!

Bookmark and Share

இரண்டாவது மகனையும் களமிறக்கினார் மயில்சாமி!

தமிழ் சினிமாவில் பெரிய ஆரவாரம் இல்லாமல் அவ்வப்போது ஒரு படத்தில் வந்து காமெடி செய்து கொண்டிருப்பவர் மயில்சாமி. இவர் தனது மகன் அன்புவை பார்த்தோம் பழகினோம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.

அதையடுத்து இப்போது அவரது இரண்டாவது மகன் யுவன் மயில்சாமியை என்று தணியும் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். ஜாதி வெறி காரணமாக கொலை செய்யப்பட்ட ஒரு உண்மை காதலர்களின் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் மயில்சாமியின் மகன் யுவன், காதல் உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறாராம். முக்கியமாக தனது மகன் சோடை போகக்கூடாது என்பதற்காக அவருக்கு போதுமான நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ள மயில்சாமி, எனது மூத்த மகன் அன்பு மட்டுமின்றி, இளைய மகன் யுவனும் சினிமாவில் பெரிய அளவில் சாதிப்பார்கள்.

அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. அதற்கு கால நேரம்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று மகன்களைப்பற்றி கூறி வருகிறார். மேலும், ஏற்கனவே தமிழில் சாட்டை படத்தில் நடித்த ஒரு யுவன் இருப்பதால், தன் மகனை யுவன் மயில்சாமி என்று அறிமுகம் செய்யப்போகிறாராம் மயில்சாமி.


Post your comment





Related News
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்கள்! விளையாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? மயில்சாமி கொதிப்பு வீடியோ
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
ஓடியோடி ஒரு வாரமாக உதவிய மயில்சாமியின் நெகிழ்ச்சி தருணங்கள்
மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மயில்சாமி!
நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்த அஜீத்..!
எந்த நடிகரும் செய்யாததை அஜித் செய்தார்- மயில்சாமி நெகிழ்ச்சி
கவுரவ கொலையை மையமாக கொண்டு உருவாகும் என்று தணியும்
கொக்காகிறார் மயில்சாமி மகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions