கதாநாயகனாக நடிக்கும் மயில்சாமியின் மகன்

Bookmark and Share

கதாநாயகனாக நடிக்கும் மயில்சாமியின் மகன்

பல படங்களில் காமெடியிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மயில்சாமி. இவருடைய மகன் அன்பு. இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பட்டியல் சேகர் தயாரிக்கிறார். இவர் நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தையாவார்.

இப்படம் குறித்து பட்டியல் சேகர் கூறும்போது, இப்படம் முழுக்க முழுக்க காமெடி பொழுது போக்கு படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை ஜான்சன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

வேலையில்லாமல் ஜாலியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஊர் சுற்றும் வாலிபன் பிராமணப் பெண் மீது காதல் வயப்படுகிறான் என்பதை மையக்கருவாக வைத்து சுவாரஸ்யமாக எடுக்கவுள்ளோம். இதில் அன்பு கதாநாயகனாவும், பாப்ரி கோஷ் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கிரண், ஜெயஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ளது. சென்னையை சுற்றியே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என்று கூறினார்.


Post your comment





Related News
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
விபச்சாரத்தை அனுமதிக்கிறீர்கள்! விளையாட்டை ஏன் தடுக்கிறீர்கள்? மயில்சாமி கொதிப்பு வீடியோ
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
ஓடியோடி ஒரு வாரமாக உதவிய மயில்சாமியின் நெகிழ்ச்சி தருணங்கள்
மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மயில்சாமி!
நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்த அஜீத்..!
எந்த நடிகரும் செய்யாததை அஜித் செய்தார்- மயில்சாமி நெகிழ்ச்சி
கவுரவ கொலையை மையமாக கொண்டு உருவாகும் என்று தணியும்
கொக்காகிறார் மயில்சாமி மகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions