கவுரவ கொலையை மையமாக கொண்டு உருவாகும் என்று தணியும்

Bookmark and Share

கவுரவ கொலையை மையமாக கொண்டு உருவாகும் என்று தணியும்

காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி அறிமுகமாகும் படம் என்று தணியும். பிரபல பேச்சாளரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

சாந்தனா, ஜீவிதா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இரா.பிரபாகர் இசை அமைக்கிறார். எஸ்.பி.மணி ஒளிப்பதிவு செய்கிறார்.

வேகமாக வளர்ந்து வரும் படம் பற்றி பாரதிகிருஷ்ணகுமார் கூறியதாவது: தாஜ்மஹால், கடல் பூக்கள் படத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றேன். பாட்டு, பைட்டு நிறைந்த கமர்ஷியல் சினிமாவில் எனக்கு உடன்பாடில்லை.

அதனால் எனக்கு பிடித்த மாதிரியான குறும்படங்களை இயக்கினேன். நான் இயக்கிய ராமைய்யாவின் குடிசை குறும்படம் பல விருதுகளை பெற்றது. தற்போது என்று தணியும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். இது உண்மை கதை அல்ல.

ஆனால் உண்மைகளின் கதை. ஜாதிகளின் பெயரால் கவுரவ கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. பெற்ற மகளை தந்தை கொல்கிறான். சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கையை கொல்கிறார்கள்.

இது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். கவுரவ கொலை என்கிறார்கள். கொலையில் என்னடா கவுரவம் என்று கேட்கிற படமாக இது உருவாகிக் கொண்டிருக்கிறது. கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும், அதன் வீச்சு எப்படி இருக்கும் என்பதைத்தான் படத்தில் காட்டுகிறேன்.

நல்ல படங்களுக்கு ஆதரவு கிடைக்கும் ஆரோக்கியமான சூழலில் நம்பிக்கையோடு இந்தப் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். என்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions