விமான நிலையத்தில் நிறுத்தி இருந்த பட அதிபர் மதன் காருக்கு பூட்டு!

Bookmark and Share

 விமான நிலையத்தில் நிறுத்தி இருந்த பட அதிபர் மதன் காருக்கு பூட்டு!

பட அதிபர் மதன், வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி முதல் மாயமானார்.

அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் மற்றும் மனைவிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாயமான மதனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் படஅதிபர் மதன் பயன்படுத்தி வந்த கார் நிறுத்தப்பட்டு உள்ளது. 

அவரது காரை வேறு யாரும் எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த காருக்கு விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் நடேசன், விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வாகன பராமரிப்பாளர்கள் உதவியுடன் பூட்டு போட்டனர்.

இந்த காரை வேறு யாரும் அங்கிருந்து எடுத்துச் செல்லாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions