தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் சங்கத்திற்கு 6-வது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு!

Bookmark and Share

தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் சங்கத்திற்கு 6-வது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு!

சினிமாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவர்கள் பி.ஆர்.ஓ.க்கள் எனப்படும் மக்கள் தொடர்பாளர்கள். இவர்களது தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று காலை சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு, ஆதம்பாக்கம் ராமதாஸ், நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு முடிந்தநிலையில், வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவராக டைமண்ட் பாபு வெற்றி பெற்றார். இவர் 6-வது முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்: துணை தலைவர்கள் - பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர். பொதுச் செயலாளர் - ஜான். பொருளாளர் - விஜயமுரளி. இணைச் செயலாளர் - நிகில் முருகன் மற்றும் யுவராஜ். செயற்குழு உறுப்பினர்களாக வெட்டுவானம் சிவகுமார், மேஜர் தாசன், அந்தணன், பாலன், ஆறுமுகம், கிளாமர் சத்யா, சக்திவேல், சரவணன், ரேகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Post your comment





Related News
அடங்காத சமூக வலைஞர்கள்... அட, விட்ருங்கப்பா விஷாலை!
விஜய் மீடியாவை அழைத்தாரா? என்னதான் நடந்தது?
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ பஜிராவ் மஸ்தானி”
“கலாம் விருதுகள்” அறிமுக விழா
ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா
மீடியாக்களுடன் நெருக்கமாகும் சித்தார்த்!
மீடியாவை தவிர்க்கும் ஜெய்: வந்தது எச்சரிக்கை..!
ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக விளம்பர தூதராக கத்ரினாகைப் நியமனம்..!
சி.சி.எல் சென்னை அணி விளம்பர தூதராக த்ரிஷா..!
சோஷியல் மீடியா தான் இன்னைக்கு மிகப்பெரிய பிளாட்ஃபார்ம்-சிம்புதேவன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions