கேரக்டருக்கேற்ப முதிர்ச்சியை காட்டுவாராம் மீனா!

Bookmark and Share

கேரக்டருக்கேற்ப முதிர்ச்சியை காட்டுவாராம் மீனா!

த்ரிஷ்யம் மலையாள படத்தில் மோகன்லாலுடன் நடித்த மீனா அதன்பிறகு அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடித்தார்.

பின்னர், அதே படம் கன்னடம், தமிழில் ரீமேக் ஆனபோதும் அதே வேடத்தில் நடிக்க முயற்சி எடுத்தார் ஆனால் ஒர்க்அவுட்டாகவில்லை. இருப்பினும், தற்போது மலையாளம், தெலுங்கில் சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார் மீனா.

ஆனால், மலையாளத்தில் த்ரிஷ்யத்துக்கு பிறகு ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்று நினைத்த மீனாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறதாம். காரணம், அந்த படத்தில் மீனாவின் கேரக்டர் பேசப்பட்டபோதும், பெண் ஐஜியாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்பைதான் அங்குள்ள மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதினார்களாம். அதன்காரணமாக, திருஷ்யம் படம் ஆஷா சரத்தைதான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக்கி விட்டதாம்.

ஆனால் அடுத்தபடியாக பெரிய பெரிய படவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த மீனாவுக்கு பெரிதாக எந்த படமும் கிடைக்கவில்லையாம். அதனால் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து விட்ட மீனா, சென்னை, பெங்களூரில் முகாமிட்டு புதிய படவேட்டைகளில் இறங்கியிருக்கிறார்.

அதோடு முன்பெல்லாம் நரைமுடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கண்டிசனாக பேசி வந்த மீனா, இப்போது 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்து விட்டதை அடுத்து, கேரக்டருக்கேற்ப உடம்பில் முதிர்ச்சியை காட்டி நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் முன்மொழிந்து வருகிறார்.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
அஜித் பிடிவாதக்காரர், மேக்கப்பே போடமாட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions