குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து நடிக்க வைக்கும் மீனா!

Bookmark and Share

குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து நடிக்க வைக்கும் மீனா!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் குமரி ஆன பிறகு ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின் ஆனார் மீனா. 

அதன்பிறகு 2009ல் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியிருந்தவர், மகள் நைனிகா பிறந்த பிறகு மறுபடியும் தம்பிக்கோட்டை படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த திருஷ்யம் படத்தில் நடித்த பிறகு மீண்டும் பிரபலமாகி விட்டார். இந்நிலையில், நான்கு வயதாகும் தனது மகள் நைனிகாவை விஜய்யின் தெறி படத்தில் நடிக்க வைத்துள்ளார். 

இந்த படத்தில் தம்பதிகளாக நடிக்கும் விஜய்-சமந்தாவுக்கு மகளாக நடிக்கிறார் நைனிகா. மகளுக்கு இது முதல் படம் என்பதால், ஒவ்வொரு நாளும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு முந்தின நாள் வீட்டில் வைத்தே பயிற்சி கொடுக்கிறாராம் மீனா. 

அதனால் அடுத்த நாள் கேமரா முன்பு செல்லும்போது தனக்கான காட்சிகளை ஓரிரு ஷாட்டிலேயே ஓகே செய்து விடுகிறாராம் நைனிகா. அப்படி மகள் ஒரு ஷாட்டில் ஓகே செய்து விட்டு வந்ததும் அவருக்கு தனது பேக்கில் வைத்திருக்கும் சாக்லெட்டை எடுத்துக்கொடுத்து சந்தோசப்படுத்துகிறார் மீனா.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா!
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
அஜித் பிடிவாதக்காரர், மேக்கப்பே போடமாட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions