கமலுடன் நடிக்காதது மீனாவுக்கு ஏமாற்றம்தானாம்!

Bookmark and Share

கமலுடன் நடிக்காதது மீனாவுக்கு ஏமாற்றம்தானாம்!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மீனா. ஆரம்பத்தில் ஹோம்லியான வேடங்களிலேயே நடித்தபோதும் பிரபுதேவாவுடன் இணைந்த நாம் இருவர் நமக்கு இருவர் படத்திலிருந்து கவர்ச்சி உடைதரித்தும் கலக்கத் தொடங்கினார். அதனால் அதுவரை குடும்பப்பாங்கான கதைகளுக்கு மட்டுமே மீனா பொருந்துவார் என்றிருந்த நிலை மாறி அதன்பிறகு மாடர்ன் நடிகையாகவும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார் மீனா. அந்த சமயத்தில் கமலுடன் அவ்வை சண்முகி போன்ற படங்களிலும் நடித்தார். 

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி நடித்து வரும் மீனாவுக்கு மீண்டும் ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், த்ரிஷ்யம் படத்தின் மலையாள, தெலுங்கு பதிப்புகளில் நாயகியாக நடித்த மீனா, தமிழில் கமல் பாபநாசம் என்ற பெயரில் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கயிருந்தபோது அவரது ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம்.

ஆனால், அந்த வாய்ப்பு கமலின் சிபாரிசின்பேரில் கெளதமிக்கு சென்று விட்டது. அதனால் மீண்டும் கமலுடன் நடிக்கப்போகிறோம் என்று எதிர்பார்த்திருந்த மீனாவுக்கு பாபநாசம் வாய்ப்பு நழுவியது பெருத்த ஏமாற்றமாகி விட்டதாம். இருப்பினும், கெளதமியும் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நெல்லைவாசியாக பக்காவாக அவர் மாறி நடித்திருப்பது அந்த கேரக்டருக்கு இன்னொரு புதுமை கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் மீனா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions