இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!

Bookmark and Share

இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!

'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. முதல்படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த மீனாட்சி, அதன்பின்னர் கவர்ச்சி நடிகையாக மாறினார்.

தொடர்ந்து ராஜாத்தி ராஜா, மந்திர புன்னகை போன்ற படங்களில் நடித்தவர் அதன்பின்னர் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான வௌ்ளக்கார துரை படத்தில் ஒரு அதிரடியான குத்தாட்டம் போட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார் மீனாட்சி.

அவர் அப்படி ஆடியதால் தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகள் வர இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார், அதாவது இனி அவர் குத்தாட்டம் ஆடமாட்டாராம்.

இதுப்பற்றி அவர் விரிவாக நம்மிடம் பேசியதாவது,

இனி நல்ல நல்ல ரோல்களாக பார்த்து பார்த்து நடிக்க போகிறேன். பெரிய ஹீரோக்கள் - இயக்குநர்களின் படங்கள், நல்ல கேரக்டர் மற்றும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க போகிறேன். இனி ஒரு போதும் குத்தாட்டம் ஆட மாட்டேன்.

பணம் ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று கூறியவர், தற்போது ஜீவாவுடன் திருநாள் படத்தில் ஒரு முக்கியமான படத்தில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்புகள் கும்பகோணம் பகுதியில் நடப்பதாகவும் தெரிவித்தார். திருநாள் தவிர இன்னும் இரண்டு புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் மீனாட்சி தெரிவித்தார்.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
தமிழச்சியாக மாறிய மீனாட்சி!
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions