மீனாட்சி சேஷாத்ரி ரிட்டர்ன்

Bookmark and Share

மீனாட்சி சேஷாத்ரி ரிட்டர்ன்

1980, 90களில் பாலிவுட்டில் பிரபலமாக பேசப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த மீனாட்சி சேஷாத்ரி. தமிழில் பாக்யராஜ் ஜோடியாக ‘என் ரத்தத்தின் ரத்தமே’, பிரபு ஜோடியாக ‘டூயட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அமெரிக்க தொழில் அதிபர் ஹரிஷ் மைசூரை மணந்துகொண்டு நடிப்புக்கு முழுக்குபோட்டதுடன் அங்கேயே செட்டிலானார். 1990ம் ஆண்டு ‘காயல்’ படத்தில் சன்னி தியோலுடன் ஜோடியாக மீனாட்சி நடித்திருந்தார்.

அப்படத்தின் 2ம் பாகம் ‘காயல் ஒன்ஸ் அகெயன்’ பெயரில் உருவாகிறது. இதில் சன்னி தியோல் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக மீண்டும் மீனாட்சியை நடிக்க வைக்க இயக்குனர் எண்ணினார்.

இதுபற்றி மீனாட்சியிடம் பேசப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 19 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி மீண்டும் நடிக்க வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.


Post your comment





Related News
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
ஷூட்டிங்கில் தேவையில்லாமல் பேசியதால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை: பிளாஷ்பேக்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சியா..? சீரியல எப்போ சார் முடிப்பீங்க?
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த மீனாட்சி
நடிகையுடன் லிப் லாக் வேண்டாம்! அலறி ஓடிய ஹீரோ!
மும்பையில் இருந்தபடியே படவேட்டை நடத்தும் மீனாட்சி!
திருநாளில் கவர்ச்சி காட்டும் மீனாட்சி
தமிழச்சியாக மாறிய மீனாட்சி!
இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions