விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

Bookmark and Share

விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

சண்டக்கோழி 2 படத்தில் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகிறார் மீரா ஜாஸ்மின்.

‘பாயும் புலி' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்க இருக்கும் ‘சண்டக்கோழி' 2-ம் பாகத்தில் நடிக்கிறார் விஷால்.இதில் விஷாலுக்கு ஜோடியாக எமி ஜாக்சனை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இவர் தவிர, மேலும் இரண்டு முன்னணி நடிகைகளையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இந்நிலையில் ‘சண்டக்கோழி' முதல் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மினை 2-ம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு தமிழில் ‘இங்க என்ன சொல்லுது', விஞ்ஞானி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டுமே பெரிதாகப் போகவில்லை.

மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி 2-ல் நடிக்க சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.


Post your comment





Related News
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா?
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?
ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்
சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!
இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions