இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!

Bookmark and Share

இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!

தமிழ், மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன், புதிய கீதை, ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், சண்டக்கோழி, நேபாளி, மம்பட்டியான் என பல படங்களில் நடித்த மீராஜாஸ்மினுக்கு வழக்கம்போல் திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போயின.

ஆனால் முன்னணி ஹீரோக்கள் அவருடன் நடிக்கவில்லை என்றபோதும், இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் விடிவி கணேசுக்கு ஜோடியாக நடித்தார் மீரா ஜாஸ்மின். அதேபோல் புதுமுக ஹீரோ பார்த்தியுடன் விஞ்ஞானி என்ற படத்திலும் நடித்தார்.

அதையடுத்து தமிழில் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் சில படங்கள் மீரா ஜாஸ்மினை தேடிச்சென்றபோது, அவர் தனக்கு கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கேட்டதோடு, சம்பளத்தை ரொம்ப ஜாஸ்தியாக கேட்டாராம்.

அதாவது முதலில் 40 லட்சம் வேண்டும் என்ற பிடிவாதமாக இருந்தவர், இறுதியில் 30 லட்சமாவது இருக்க வேண்டும். அதைவிட குறைந்த சம்பளத்தில் நடிக்க மாட்டேன் என்று அடித்து சொல்லிவிட்டாராம்.

விளைவு, கேரக்டர் நடிகையான பிறகும் ஹீரோயினி ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கிறாரே என்று அந்த கம்பெனிகள் மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக வேறு நடிகையை புக் பண்ணி விட்டன. 


Post your comment





Related News
சீரியல் இயக்குனரையே மிரட்டினார்கள் அன்வர், சமீரா- உண்மையை உடைத்த பகல்நிலவு பிரபலம்
OMG எப்படி இருந்த மீரா ஜாஸ்மீன் இப்படி ஆகிட்டாரா?
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?
ஆண்மையை பறித்து விட்டால் பெண்ணை தொடும் தைரியம் வராது: மீரா ஜாஸ்மின் ஆவேசம்
சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை...!
விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions