தனது படத்தை தானே அறிவித்த மெகா ஸ்டார்

Bookmark and Share

தனது படத்தை தானே அறிவித்த மெகா ஸ்டார்

மெகா ஸ்டார் படம் பற்றிய எத்தனை அறிவிப்புகள் வந்தாலும், சிரஞ்சீவியே அந்த இனிய செய்தியை அறிவித்தால்தான் அவரது ரசிகர்களுக்கு முழுமையான சந்தோசம் உண்டாகும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த முக்கிய தருணமும் நடந்து விட்டது.

சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடப்பா மாவட்டத்தில் உள்ள ரயில்வே கொடூருக்கு, மன்னர் ஆந்திராபோஜ  ஸ்ரீகிருஷ்ணா தேவராயாவின் உருவ சிலை திரப்பு விழாவிற்கு சென்றார்.

அவருடைய ஏராளமான ரசிகர்களுக்கு மத்தியில் ஸ்ரீ கிருஷ்ணா தேவராயா உருவச்சிலயை திறந்துவிட்டு தனது 150வது படமான ஆட்டோ ஜானி படத்தை ஆகஸ்ட் மாதம் தனது பிறந்த தினமான 22ம் தேதி துவங்க உள்ளதாக  பகிரங்கமாக அறிவித்தார்.

சிரஞ்சீவியின் அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கரகோஷம் செய்தனர். இப்படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். தனது  மகனும், பிரபல ஹீரோவுமான ராம் சரண் தேஜ் தயாரிக்கபோகிறார் என்றும் தெரிவித்தார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இனிமேதான் தேர்ந்தேடுக்கபோகிறோம் என்றார். மேலும் இப்படம் அடுத்த வருடம் 2016 சங்கராந்தி  பண்டிகை நாளில் வெளியிடுவோம் என்று கூறினார்.ஏற்கனவே அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

 

 


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions