பாங்காக் செல்கிறது மெல்லிய கோடு டீம் -

Bookmark and Share

பாங்காக் செல்கிறது மெல்லிய கோடு டீம் -

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் புதிய படம் ஒரு மெல்லிய கோடு. இந்தப் படம் தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் தயாராகிறது. கன்னடத்தில் கேம் என்று பெயரிட்டுள்ளனர்.

அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, புதுமுகம் அக்ஷாபட் நடிக்கிறார்கள். காவல் துறையின் ஒரு பிரிவான கைரேகை நிபுணர்களின் பணியை மையமாக கொண்ட படம். அர்ஜுன் மிகச்சிறந்த கைரேகை நிபுணராக நடிக்கிறார்.

போலீசால் கண்டுபிடிக்க முடியாத ஒரு விவிஐபி கொலை வழக்கை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, பெங்களூரு, கனடா பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி இசை சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது.

இதற்காக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷா பட், நடன இயக்குனர் ராதிகா, ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம் உள்ளிட்ட படக் குழுவினர் நாளை (ஜூலை 26) பாங்காக் புறப்பட்டுச் செல்கிறார்கள். அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்கிறது. அத்துடன் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைகிறது. படத்தை செப்படம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஒரு மெல்லிய கோடு படத்தில் படப்பிடிப்பு முடிந்தது
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்
ஒரு மெல்லிய கோடு படத்தில் காஷ்மீர் அழகி
ஒரு மெல்லிய கோடு படப்பிடிப்பு தொடங்கியது
25 நாளில் எடுக்கப்பட்ட கொண்டான் கொடுத்தான் திரைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions