மெர்சலில் அரசியல் வசனங்கள் சரியா? தவறா? - சென்சார் அதிகாரி அதிரடி பேட்டி.!

Bookmark and Share

மெர்சலில் அரசியல் வசனங்கள் சரியா? தவறா? - சென்சார் அதிகாரி அதிரடி பேட்டி.!

தளபதி விஜயின் மெர்சல் படம் பல தடைகளை தாண்டி கடந்த தீபாவளி அன்று வெற்றிகரமாக வெளியாகி அனைத்து தரப்பினருடன் நல்ல வரவேற்புடன் வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஜி.எஸ்.டி வசனங்களை நீக்க வேண்டுமென படக்குழுவினருக்கு அதிகாரத்தை பயன்படுத்தி கட்டளையிட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இது குறித்து மண்டல தணிக்கை குழு அதிகாரி மதியழகன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் சார்த்த வசனங்களில் தவறு ஏதும் இல்லை. கருத்து உரிமை அடிப்படையிலேயே வசனங்கள் இடம் பெற்றுள்ளன, அதனால் தான் சென்சார் சான்றிதழ் அளித்தோம்.

 இதற்காக சம்மந்தப்பட்ட சென்சார் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்.ராஜா கூறுவது கண்டனத்துக்கு உரியது என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions