அனைத்து தடைகளும் நீங்கி கோலாகலமாக வெளியாகும் மெர்சல் - செம மாஸ் தகவல்.!

Bookmark and Share

அனைத்து தடைகளும் நீங்கி கோலாகலமாக வெளியாகும் மெர்சல் - செம மாஸ் தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்த்துள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.

மெர்சல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. ஆனாலும் படம் தொடர்ந்து சில பிரச்சனைகளை சந்தித்து வந்தது. 

குறிப்பாக படத்தின் டைட்டில் விவகாரத்தில், கோர்ட்டில் மெர்சல் படத்தின் டைட்டில் எங்கள் பட டைட்டில் என சில விசமிகள் வழக்கு தொகுத்தது. ஆனால் அந்த தடையை தகர்த்து எரிந்து மெர்சல் அதே டைட்டிலை வைத்து கொள்ளலாம் என கோர்ட் அறிவித்தது. 

பிறகு கேளிக்கை வரி விவகாரத்தில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என திட்டவட்டமாக தியேட்டர் உறிமையாளர்கள் அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளிவருவது தடை படுமோ என்ற அனைவரது மனதிலும் எழுந்திருந்தது,

ஆனால் நடிகர் மற்றும் தயாரிப்பு சங்க தலைவர் விஷால் இந்த பிரச்சனைகளை சம்மந்தமான அமைச்சர்கள் மற்றும் முதல்வரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை முடிவுக்கு வர செய்து தீபாவளிக்கு மெர்சலை தடை இன்றி வெளிவர உதவி செய்தார்.

இப்படி படத்தின் டைட்டில் விவகாரம் மற்றும் கேளிக்கை வரி விவகாரம் என அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது விலங்குகள் நல வாரியம் புதிய பிரச்சினையை மெர்சல் படத்திற்கு கொடுத்து வந்தது. தற்போது இந்த தடையும் நீங்கியது. இப்படி பல பிரச்சனைகள் வந்த போதிலும் அனைத்து தடைகளையும் தகர்த்து எரிந்து தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகிறது மெர்சல்!

தற்போது அனைத்து பிரச்சினையும் தீர்ந்து படம் எவ்வித தடையும் இல்லாமல் ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட விஐய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions