வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!

Bookmark and Share

வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!

தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள், மருத்துவ ஊழல் ஆகியவற்றை பற்றி பேசி இருப்பது ஆளும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் இது தொடர்பான காட்சிகளை நீக்கியே தீர வேண்டும் என படக்குழுவினரை மிரட்டி வந்தனர். இது ன்பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பேசும் போது மருத்துவர்களை 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க சொல்கிறீர்களா? ஆம்புலன்ஸ் ஊழியர்களை ஊழல் செய்பவர் போல சித்தரிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

மருத்துவர்களை மட்டும் 5 ருபாய் வாங்க சொல்லி விட்டு நீங்கள் மட்டும் ஏன் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தவறு செய்பவர்களுக்கு தான் வலிக்க வேண்டும், உங்களுக்கு ஏன் வலிக்கிறது? நடிகர்களை விட கோடி கோடியாய் ஊழல் செய்து கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களை இந்த கேள்வியை கேளுங்கள் என கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions