அசர வைக்கும் மெர்சல் படத்தின் தியேட்டர் லிஸ்ட்

Bookmark and Share

அசர வைக்கும் மெர்சல் படத்தின் தியேட்டர் லிஸ்ட்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. அதேபோன்று இன்னொரு உலக சாதனை செய்ய காத்திருப்பதாகவும், அதற்காக டிரைலரை வெளியிடுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால், டிரைலர் இல்லாமல் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கேளிக்கை வரி பிரச்சனையால், ‘மெர்சல்’ படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் ‘மெர்சல்’ படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார். அதன்படி ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் சுமார் 3292 திரையரங்கில் வெளியாக இருக்கிறதாம். இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions