மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!

Bookmark and Share

மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் அனைத்துமே மெகா ஹிட் அடித்து வருகின்றன, இந்நிலையில் தளபதி விஜய் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்கள் படக்குழுவினர் என அனைவரையும் அப்செட்டாக்கியது சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற வார்த்தையை பயன்படுத்த விதித்துள்ள தடை. 

இதனால் படத் தலைப்பிற்கான தடையை உயர் நீதிமன்றம் நீக்க மறுத்து விட்டால் படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என டைட்டில் வைத்து விடலாம் என தளபதி ஐடியா கொடுத்துள்ளாராம்.

இதற்கு இயக்குனர் அட்லீ மற்றும் படக்குழுவினர் சம்மதம் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன, இந்த டைட்டிலும் அட்டகாசமாகத் தான் இருக்கு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions