மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம்

Bookmark and Share

மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம்

மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் என வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

பொதுவாக, ரெயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக நேரத்திற்கு மெட்ரோ ரெயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரெயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் ட்ரைலர் வருமா - வராதா? அதிகார்வபூர்வ தகவலை வெளியிட்ட படக்குழுவினர்!
மெட்ரோ பட இயக்குனரின் வருத்தமான Fools Day பதிவு
பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?
பைரவா டிரைலர் செய்த புதிய சாதனை
மெட்ரோ தெலுங்கில் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?
ஹிந்திக்கு செல்லும் தமிழின் சமீபத்திய மெகாஹிட் படம்!
உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !
தெலுங்கில் ரீமேக்காகும் மெட்ரோ!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மெட்ரோ’
திரையுலகில் அறிமுகமாகும் 'மெட்ரோ' சிரிஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions