மக்கள் திலகத்தின் ‘எம்.ஜி.ஆர்.பிக்ஸர்ஸ்’மீண்டும் உதயமாகிறது!

Bookmark and Share

மக்கள் திலகத்தின் ‘எம்.ஜி.ஆர்.பிக்ஸர்ஸ்’மீண்டும் உதயமாகிறது!

1956-ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் “EMGEEYAR” பிக்ஸர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

1958-ல் “நாடோடி மன்னன்”…1969-ல் “அடிமைப்பெண்” ..1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்”..என பிரம்மாண்டமான மூன்று வெற்றிப்படங்களை ‘எம்.ஜி.ஆர்.பிக்ஸர்ஸ்’தயாரித்து வெளியிட்டது.

இதன் மூலம் மக்கள் திலகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் சாதனை நாயகன் என்று நிரூபித்தார்.
“EMGEEYAR” பிக்ஸர்ஸ் துவங்கி 60-ஆண்டுகள் நிறைவடை ந்து விட்டது.மக்கள் திலகம் மறைந்த பின் “EMGEEYAR” பிக்ஸர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை அவருடைய வளர்ப்பு மகன் அப்பு என்கிற திரு.K .ரவீந்திரன் கவனித்து வந்தார்.

K .ரவீந்திரன் இறந்த பிறகு அவருடைய மனைவி திருமதி.நிர்மலா ரவீந்திரன் மற்றும் அவர்களின் மகன்கள் திரு.செல்வம் ரவீந்திரன் ,,திரு.சேகர் ரவீந்திரன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். வருகிற 17-1-2017-ல் புரட்சித் தலைவரின் 100-வது பிறந்த நாள் விழா வருகிறது.

அதை சிறப்பிக்கும் வகையில் மீண்டும் மக்கள் திலகத்தின் ‘எம்.ஜி.ஆர்.பிக்ஸர்ஸ்’!! தயாரிப்பு நிறுவனத்தை புதுப்பித்து புதிய படங்களை தயாரிக்கும் இனிய அறிவிப்பினை அன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்போகிறார்கள்.

“நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களும் எல்லாதரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் படியான …குறிப்பாக மக்கள் திலகத்தின் படங்களைப்போல் தரமான படமாக இருக்கும்” என்றுசெல்வம் ரவீந்திரன் ,.சேகர் ரவீந்திரன் இருவரும் தெரிவித்தார்கள் .


Post your comment





Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions