எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை துவக்கி வைக்க சசிகலாவை சந்தித்து அழைப்பு விடுத்த கோலிவுட்

Bookmark and Share

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை துவக்கி வைக்க சசிகலாவை சந்தித்து அழைப்பு விடுத்த கோலிவுட்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை துவக்கி வைக்குமாறு திரையுலகினர் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் திரையுலகினர் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை துவங்கி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை 12-1-2017 அன்று (நேற்று), திரைப்பட இயக்குனர்களான பி.பாரதிராஜா, கே.பாக்யராஜ்;தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத் தலைவர் கதிரேசன்; தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கட்ரகட பிரஜாத்; சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்; தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், முருகேசன்; சென்னை- செங்கல்பட்டு-திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, சாகுல் அமீது, பிரசாத், வெங்கட்; தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் சிவா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன்; தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார்; திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செல்வின் ராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு திரைப்படத்துறையின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, முதல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment

Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions