சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நடிகர்–நடிகைகள் பங்கேற்பு

Bookmark and Share

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நடிகர்–நடிகைகள் பங்கேற்பு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகிற 20–ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.

இதில் நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலை 10 மணிக்கு டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் இதில் பாடப்படுகின்றன. காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடக்கிறது. எம்.ஜி.ஆரைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.

பிற்பகல் 3 மணிக்கு எம்.ஜி.ஆர். படங்களின் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு சி.என்.எஸ். குழுவினர் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை பாடுகிறார்கள்.

இரவு 7 மணிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று எம்.ஜி.ஆர். புகழைப் பற்றி பேசுகிறார்கள். இதில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தொகுப்பும் திரையிடப்படுகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா விருதும் வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறக்கட்டளை மற்றும் பொன்மனல் செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் சார்பில் எம்.ஜி.சி.பி. பிரதீப், உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு ஆகியோர் செய்துள்ளனர்.


Post your comment





Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions